Mannivakkam







தல வரலாறு

பண்டு செய் வினையினால் குமுத ராஜனொடு
பழிக் கஞ்சிடாத புலியாய்
பலவகைப் பிராணிகளை வதை செய்திடக் கண்ட
பாராளுகின்ற ராஜன்
மிண்டு செய் வேங்கையை வெல்லவே சபதமொடு
விரட்டியெ வரும் வேளையில்
வெற்புலியேனும் மடுவில் வீழ்ந்து கரையேறவே
மெய்ஞானமுடன் ராஜனாய்
அண்டர் கோ நாமுனை தரிசித்து முத்தி பெற
அருள்கவென்றே துதிக்க
அழகான நந்தி கீழ் முகமாகும் வேளையில்
அருளுவோம் முத்தியன்றெ வண்டுண்ணும் புடபரதமே தந்து சொக்கமதில்
வாழ்வித்த மண்ணிநகர் வாழ்
மங்கை மரகதவல்லி பங்கிலென்ணாலும்
வாழ் வளர் வள்ளலே மண்ணிசனே

மிருத்யு என்றால் மரணதேவதை. அவன் அழைப்பிதழை யாரும் உதாசினம் செய்ய முடியாது. அவ்விதியையே மாற்றினான் ஒவ்வொன்றால் அவன் சர்வ வல்லமை படைத்த ஈசனாய்தான் இருக்க வேண்டும். காலசம்ஹார மூர்த்தி என்ற காலனை அகாலனாக்கிய தலங்கள் மிக சில. அவற்றுள் ஒன்று தாம்பரத்திற்கு அருகில் வண்டலூருக்கு மேற்கில் மண்ணிவாக்கம் உள்ளது.

புராணம்
தொண்டைமண்டலம் முழுவதும் ஒரு காலத்தில் குரும்பர்கள் ஆட்சியிலிருந்தது. ஆதொண்டைச் சக்கிரவர்த்தி இக்குரும்பர்களை வென்று நிலைநாட்டியதால் தொண்டை மண்டலம் என்று நாடு அழைக்கப்பட்டது.தன் படை பலத்தால் குரும்பர்களை அடக்க முடியாத நிலையில் தொண்டைமான் சக்கிரவர்த்தி இறைவனே கதி என அவன்தாள்புக ஈசனும் தன் வாகனமான நந்தியை அனுப்பி வெற்றிபெறச் செய்து தொண்டைமானுக்கு உதவி புரிந்தார் என்பது புராணச்செய்தி.
அதற்கேற்ப தொண்டை நாட்டில் திருமுல்லைவாயில்,சோமங்கலம்,மாத்தூர், வல்லம் இம்மண்ணிவாக்கம் என்ற தலங்களில் நந்தி சிவபெருமானின் சன்னதி நோக்காமல் கோபுர வாயிலை பார்த்து வெளியே போருக்கு புறப்படும் நிலையில் உள்ளதாகவே வடிக்கப்பட்டிருக்கிறது.
ஆலயம் இறைவன் மிருத்ஞ்ஞயேஸ்வரன் என்கின்ற மண்ணிஸ்வரர் இறைவி மரகதாம்பிகை கலையழகு பொருந்திய விசயநகர அமைப்பைக்கொண்ட கர்ப்பகிருகத்தில் விஷ்ணுவின் உருவத்தோடு கூடிய பஞ்கோஷ்ட்ட தேவதைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

தனி துவாரபாலகர்களின்றி மூத்தபிள்ளை கணேசரும், இளைய பிள்ளை முருகனுமே சன்னதிக்கு காவலாய் நிற்கின்றனர். மரகதாம்பிகை என்றழைக்கப்படும் அம்பாளுக்கு தனி சன்னதி உண்டு. லிங்க ரூபத்தில் இருக்கும் சிவபெருமான் தன் அடியார்களை தனது பல உருவங்களாக கொண்டு ஆட்கொள்கிறார். இக்கோயில் சிவபெருமானின் பல்வேறு ரூபங்கள் அழகிய செப்பு படிமங்களாக திகழ்கின்றன.

இவற்றுள் கண்ணை கவர்வது,உமையின் வலது கரம் மகேஸ்வரனின் இடையையும் மகேஸ்வரனின் இடதுகரம் உமையின் தோள்களையும் அணைத்தவாறு உள்ள வேலைபாடுள்ள படிமங்களாகும்.
இவற்றுள் கண்ணை கவர்வது,உமையின் வலது கரம் மகேஸ்வரனின் இடையையும் மகேஸ்வரனின் இடதுகரம் உமையின் தோள்களையும் அணைத்தவாறு உள்ள வேலைபாடுள்ள படிமங்களாகும்.

இத்திருக்கோவிலில் துந்துபி ஆண்டு தைதிங்கள் 13ம் நாள் 26/1/83 அன்று திருக்குடப் புனித நன்னீராட்டு பெருவிழா இனிதே நடைபெற்றது. இத்திருக்கோவில் இந்து அற‌நிலைய‌ ஆட்சித்துறையின் கீழ் ஒரு கால‌ பூஜை ந‌டைபெறுகிற‌து.

கோவில் நேர‌ம் காலை 7.30 முத‌ல் 10.30 வ‌ரை
மாலை 5 முத‌ல் 7.30 வ‌ரை

பேருந்து வச‌தி
தாம்ப‌ர‌ம்‍‍ முதல் மண்ணிவாக்கம் அல்லது படப்பை மாநகரப் பேருந்து
இறங்கும் இடம் மண்ணிவாக்கம் சந்திப்பு

தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் சாலையில் 8 கீலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பேருந்து எண்‍ M55,M79

கோவிலைப்பற்றி தகவல் தந்து உதவிய அன்பர்கள்
திரு.K.L.வெங்கடேசன்
திரு.T.சக்திவேல்
 

About

Site Info

Tamilnadu Temple Tours Copyright © 2009 Community is Designed by Bie